தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விருவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி பேசியுள்ளார்.
அதாவது விஜய்யின் மகன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார் படிப்பு முடித்த பிறகு சஞ்சய் இயக்குனராக களம் இறங்க உள்ளதாக விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனரானார் முதலில் விஜய் சேதுபதியை வைத்து தான் படம் இயக்குவாராம்.ஏனென்றால் தன்னுடைய அப்பாவை வைத்து இயக்கினால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆனால் விஜய்யினால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பெயர் வந்துவிடும் என கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.