கேரளா மாநிலத்தை சேர்ந்த சஞ்சு சாம்சன் கடந்த பல வருடங்களாக தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும் இந்தாண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்ப்பட்டு இறுதிப்போட்டி வரை தன் அணியை எடுத்து சென்றார் சஞ்சு சாம்சன்.
இந்நிலையில் சமீபத்தில் T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. மேலும் பலரும் அவரை தேர்வு செய்யாததற்கு கடும் கண்டனம் விதித்தனர்.
இந்நிலையில் தற்போது சஞ்சு சாம்சனின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான அணி அக்டோபர் 6ம் தேதியன்று தான் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. இதனால் அன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக புதிய அணியை உருவாக்கவுள்ளனர்.இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் துணைக் கேப்டனாக அணிக்குள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனையடுத்து நியூசிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தனர். மேலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.