தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடக்கி தற்போது கலக்கல் கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். கதையின் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது ஆக்சன் கதாநாயகனாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்தனகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குளுகுளு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி கடந்த 29 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் சத்தமின்றி வெளியானது .

அதுல்யா சந்திரன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, மாறன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரெட் ஜெய்ன்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.
படத்தின் ஒரு வரி கதை என்னவென்றால், உதவி என யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு ஓடோடி உதவி செய்பவர் தான் நம்ப ஹீரோ. அப்படி ஒருநாள் சில இளைஞர்கள் தங்கள் நண்பனை காணவில்லை அவரை கண்டுபிடித்து தாருங்கள் என ஹீரோவிடம் உதவி கேட்டு உள்ளனர் . இறுதியில் ஹீரோ காணாமல் போன நண்பரை கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் ஒரு வரி கதை.
படத்தின் ஒரு வரி கதையை பார்த்தல் சாதாரண படமாகத்தான் தெரியும். ஆனால் இந்த கதையை இயக்குனர் ரத்னகுமார் கையாண்ட விதம் ரசிகர்களை நன்றாக ரசிக்க வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

குறிப்பாக காமெடி, கவுண்டர்கள் என கலக்கும் சந்தானம் இப்படத்தில் வழக்கத்திற்கு மாறான நடிப்பை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். சற்று சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளது ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது .
மறுப்பக்கம் படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தை தாங்கி நிற்கின்றன. ரத்னகுமாரின் திரைக்கதைக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது சந்தோஷ் நாராயணனின் இசையும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது .

இந்த படத்தில் பல விஷயங்கள் பாராட்டும் வகையில் அமைந்தாலும் முதல் பாதியில் திரைக்கதை சற்று மெதுவாக செல்கின்றது. இடைவேளை முதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை திரைக்கதை விறுவிறுப்பாக நகர்வதால் ரசிகர்களுக்கு அது ஒரு குறையாக தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
மொத்தத்தில் சந்தானம் மற்றும் ரத்னகுமார் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமைந்துள்ளது என்பதில் எந்த சதேகமும் இல்லை .