ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பாகவளி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் 21A அரசு பேருந்தை சுமார் மூன்று மணி நேரம் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த போராட்டத்தின் போது ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து வாலாஜா பேருந்து நிலையம் வழியாக முசிறி கிராமம் வரை 21A அரசு பேருந்து நாள்தோறும் நாள் ஒன்றுக்கு நான்கு முறை முறை என்கிற விதத்தில் இயக்கப்பட்டு வருகிறது இந்த கிராமத்துக்கு தனியாக தனியார் பேருந்து வசதியும் இயக்கப்படுவதில்லை இதனால் இந்த அரசு பேருந்து சேவையை நம்பி தான் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாள்தோறும் சென்று வருகின்றனர் .
ஆனால் அப்பகுதிக்கு இந்த ஒரு பேருந்து மட்டுமே உள்ளதால் உரிய நேரத்திற்கு உரிய இடத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே இந்த வழித்தடத்தில் கூடுதலான பேருந்து இயக்கப்பட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு அதிகாரியும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் திடீரென அரசு பேருந்தை சிறைப்பிடித்து கூடுதல் பேருந்து மற்றும் கூடுதல் வழித்தடங்களில் இயக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து சுமார் மூன்று மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர் மற்றும் வாலாஜா வட்டாட்சியர் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து சென்றனர்.