விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் விழுப்புரம் தளவானூர் என்ற 19 டி தளவானூர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து தளவானூர்க்கு 19 டி பேருந்து ஏராளமான பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு சென்றனர் இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிக்கட்டியில் தொங்கிவாரு ஒரு சிலர் பேருந்தில் பயணம் செய்து வந்தனர் இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்துக்குள் ஏறுமாறு அவர்களிடம் அறிவுறுத்தினர் ஆனால் இதை கேட்காமல் சென்ற பள்ளி மாணவர்களால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சாலாமேடு என்ற பகுதியில் பேருந்து விட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கீழே இறங்கிவிட்டனர்.
பேருந்தில் படிக்கட்டில் இருந்து மேலே ஏறினால் மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் மாணவர்கள் ஒரு சிலர் படியில் இருந்து பேருந்தில் ஏறியதால் பின்னர் நீண்ட நேரம் கழித்து பேருந்தை அங்கிருந்து பேருந்து ஓட்டுனர் எடுத்து சென்றார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.