பொங்கலுக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், பாலகிருஷ்ணா படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், வாரிசு படத்திற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை வெடித்திருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்த முடிவை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என கூறி இருக்கிறார்.
Seeman Speech latest about Thalapathy Vijay #Varisu Telugu heros film industry @actorvijay pic.twitter.com/7oAcvzn6pY
— Deepa Vijay ツ (@Deepa_0ff) November 18, 2022
மேலும் அவர் கூறியுள்ளதாவது, இது விஜய் எனும் ஒரு நடிகருக்கு எதிராக எழுந்திருக்கும் சிக்கல் அல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிராக கொடுக்கப்படும் நெருக்கடி. விஜய் படத்திற்கே இந்த நிலை என்றால், மற்ற படங்கள் என்னவாகும்” என சீமான் கேட்டிருக்கிறார்.