மர்மதேசம் ,ஜீ பூம் பா போன்ற தொடர்களில் நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்தர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சியில் தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் இளம் வயது ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் லோகேஷ்.
இப்போது ரசிகர்களின் பேவரைட் தொடராக திகழும் ‘மரம்தேசம்’ மறு ஒளிப்பரப்பிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் இவருக்கு நடிப்பை விட டைரக்ஷனில் ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார்.

அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தில் ராஜேந்திரனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்