தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.அதில் இளைய மகள் அதிதி ஷங்கர் திரைத்துறையில் நாயகியாக நடித்து வருகின்றார்.மேலும் மூத்த மகள் ஐஸ்வர்யா ரோஹித் என்பவரை மனம் முடிந்தார்.கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது.
இந்நிலையில் மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முடியாததால் வரவேற்பு நிகழ்ச்சியை கடந்த மே மாதம் தடபுடலாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டதோடு, அதற்காக பத்திரிக்கை அடித்து சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு கொடுத்து வந்தார். ஆனால் திட்டமிட்டபடி திருமண வரவேற்பு விழா நடைபெறவில்லை.
இதற்கு காரணம் ஷங்கரின் மருமகன் ரோஹித் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது தான்.ரோஹித்தின் தந்தை தாமோதரன் புதுச்சேரியில் கிரிக்கெட் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கிளப்பில் பயிற்சி பெற வந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அங்குள்ள பயிற்சியாளரான தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து கிளப் நிர்வாகத்திடம் புகாரளித்தும் சம்மந்தப்பட்ட பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காததால், அடுத்தகட்டமாக இந்த விவகாரம் போலீஸிடம் சென்றது.
இதையடுத்து பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ரோகித் உள்பட 5 பேர் மீதும் போக்ஸோ சட்டம் பாய்ந்தது. ஷங்கரின் மருமகன் இந்த வழக்கில் சிக்கியதால் இந்த விவகாரம் பூதாகரமானது.
இதுகுறித்து கடந்த சில மாதங்களாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த ரோஹித், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மன அழுத்தத்தின் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வை அறிவித்தார் ரோஹித்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது ,அதில், “நான் மிகவும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனக்கு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது கிரிக்கெட் தான். என் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்த கிரிக்கெட்டிற்கு நான் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறேன். மன உளைச்சலில் இருப்பதால் தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற முடிவெடுத்து இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என குறிப்ப்பிட்டுள்ளார்.