விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையிலே பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அனல் பறக்க துவங்கியது.
இதனால் பிக்பாஸ் வீடு தற்போது பரபரப்புகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று வருகிறது.இந்நிலையில் தற்போது நீயும் பொம்மை நானும் டாஸ்க் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இடையே சண்டைகள் அனல் பறக்க துவங்கியுள்ளது. இந்த போட்டியில் செரீனா மயக்கம் போட்டு விழ, அசீம் அவரை தூக்கிக்கொண்டு மறுத்து அறைக்கு ஓடினார்.
#Sherina has been disqualified by BB#BiggBossTamil6 pic.twitter.com/AQ0s1eBgSn
— BIGGBOSS VIDEOS (@BIGGBOSS_VIDEOS) October 27, 2022
இந்நிலையில் செரினாவிடம் பேசும் பிக்பாஸ் உங்களால் இந்த போட்டியை ஈடு கொடுத்து விளையாட முடியாததால், இந்த போட்டியிலிருந்து விலக்கப்படுவதாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக துவங்கியதையடுத்து செரீனாவின் ஓவர் ஆக்டிங் முடிவுக்கு வந்துவிட்டதாக நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.