நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு முன்பு ஷிகர் தவான் பேசியது ,நான் எப்போதுமே அணியில் உள்ள வீரர்களிடம் சகஜமாக பேசி பழகுவேன். அதுதான் என்னுடைய இயல்பு. இது கேப்டனாக எனக்கு நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. என்னுடைய முக்கிய பலமே நான் நெருக்கடியான கட்டத்தில் பதற்றம் இல்லாமல் இருப்பேன். இப்படி இருக்கும் போது உங்களால் அணியை நிர்வகிக்க முடியும். ஆட்டத்தில் தவறுகள் நடக்கத்தான் செய்யும் .
அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர உங்கள் மீது நீங்கள் அழுத்தத்தை போட்டுக் கொள்ளக் கூடாது.எனக்கு கேப்டன் பதவி அவ்வப்போது கிடைக்கிறது அது நினைத்து எனக்கு மகிழ்ச்சி தான். ஆட்டத்தில் என்ன நடக்கிறது எப்படி யுத்திகளை அமைக்க வேண்டும் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதெல்லாம் நீங்கள் அதிகமாக விளையாடும் போது தான் உங்களுக்கு கிடைக்கும்.

எனக்கு தற்போது இந்த நம்பிக்கை வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பந்துவீச்சாளர் அதிகமாக ரன் கொடுத்தால் கூட அவர் என்ன நினைப்பாரோ என்று அவருக்கான ஓவரை கொடுத்து விடுவேன்.ஆனால் இப்போது அந்த தவறை நான் செய்வதில்லை என்றார் தவான்.