Skygain News

சிவசேனா சின்னம் முடக்கம்: ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி..!

சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் மற்றும் மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரரின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் ராஜு நய்யர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, கட்சியின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இருதரப்பினரின் நலன் கருதி நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு விரைந்து தீர்வுகாணவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More