பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சைகளில் சிக்கி வரும் போட்டியாளராக திகழ்கின்றார் அசீம்.கடந்த வாரம் இவர் திருநங்கை போட்டியாளரான ஷிவினை கிண்டல் செய்தது பலரது கண்டனத்திற்கு உண்டானது.
இந்நிலையில் தற்போது ஷிவின் அசீமை பாராட்டியது பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.அவர் கூறியதாவது ,இந்த ஷோவை நல்லா என்டர்டெயின்மென்டாக எடுத்துட்டு போகிறார் என்று பார்ததால் அசீமை நான் சொல்வேன். பெரும்பாலான தலைப்புகளில் அவர் பெயர் அடிபட்டிருக்கு என்றார்.
திருநங்கையான ஷிவின் கணேசனை கடந்த வாரம் அசீம் கிண்டல் செய்தார். ஷிவின் செய்ததை மீண்டும் செய்து காட்டி அசிங்கப்படுத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் மட்டும் அல்ல பலரும் அசீமுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.

ஷிவின் விஷயத்திற்காகவாவது அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றார்கள். இந்நிலையில் அசீமை பற்றி ஷிவின் பேசியதை பார்த்தவர்கள், உங்களுக்கு நல்ல மனசு என்று பாராட்டுகிறா்கள்