விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார்.
Thalapathy Vijay @actorvijay 🥵💥pic.twitter.com/uLTSLIMzTJ
— Rocky bhai (@Rocky__420) November 22, 2022
அப்போது அவர் விஜய்க்கு போன் செய்து, உனக்கு சர்க்கரை பொங்கல் செய்து எடுத்துவரேன் என கூறினார். மேலும் விஜய்யை ஜோ என செல்லமாக அழைத்தார் ஷோபா சந்திரசேகர். இந்நிலையில் விஜய்யின் செல்லப்பெயர் ஜோ என்றும், அவருக்கு சர்க்கரை பொங்கல் மிகவும் பிடிக்கும் என்றும் அவரது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.