சிரியாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிண்டிரெஸ் நகரில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி இடிபாடுகளுக்குள் பச்சிளம் குழந்தை ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மீட்புக் குழுவினர் அவரை மிகுந்த கவனத்தோடு மீட்டனர். அக்குழந்தை நலமுடன் மீட்கப்பட்டதால் உற்சாகமடைந்த குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
