இந்தியாவின் ஆல்ரவுண்டராக கருதப்படும் ஹீபக் ஹூடா காயம் காரணமாக தென்னாபிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் ஹூடாவுக்கு காயம் ஏற்பட்டதால் மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பி சி சி ஐ இம்முறையும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் இருட்டடிப்பு செய்துள்ளது. தீபக் ஹூடா பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் பிசிசிஐ சேர்த்துள்ளது.

இது ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.அண்மை காலமாக டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.விக்கெட் கீப்பர் ஆகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.ஆனால் ஸ்ரேயாஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் அரை சுதம் அடித்தார்.

மற்ற போட்டிகளில் அவரும் சொதப்பி இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.இது தற்போது சமூகத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது