உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிளாமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் முகம் எப்படி இருக்கிறது பாருங்க என சொல்லி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

“Bad hair day / fever and sinus swollen day / period cramp day and the rest” என அவர் தனது உடல்நிலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்..