உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனும் பிரபல நடிகையாக உள்ளார். தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.பின்னர் தனுஷின் 3, விஷாலுடன் பூஜை, விஜய் உடன் புலி, சூர்யாவுடன் சிங்கம் 3 விஜய் சேதுபதியின் லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிக்க வந்தபோது ஸ்ருதியின் மூக்கு வேறு மாதிரி இருந்தது, அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை அழகாக்கிவிட்டார் என்று பல காலமாக பேசப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் உண்மையை சொல்லியிருக்கிறார்.

ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, ஆமாம் என் மூக்கை சரி செய்தேன். என் மூக்கு உடைந்துவிட்டது. அந்த மூக்குடன் தான் முதல் படத்தில் நடித்தேன். அதன் பிறகே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சரி செய்தேன். என் முகம், நான் ஏன் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.