இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரராக கலக்கி வருபவர் சுப்மன் கில்.இவரும் பாலிவுட் திரையுலகை சார்ந்த இளம் நடிகையான சாரா அலி காணும் காதலிப்பதாக தகவல்கள் வந்தன.இதனை உறுதி செய்யும்விதமாக, இருவரும் மும்பை நகரத்தை ஒன்றாக வலம் வருவது, இரவு உணவிற்கு செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இதற்கும் ஒருபடி மேல் சென்றது இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக பயணித்து வருவது தான். சாரா அலிகான் சமீபத்தில் விமானத்தில் எங்கேயோ செல்வது போன்று புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் சுப்மன் கில்-ம் அருகில் அமர்ந்துக்கொண்டிருந்தார். இதனால் இருவரின் காதலையும் ரசிகர்கள் உறுதி செய்துக்கொண்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து முதல்முறையாக சுப்மன் கில் பேசியுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம், ” பாலிவுட்டில் மிகவும் ஃபிட்டான நடிகை யார்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் உடனடியாக சாரா அலிகான் எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து தான் நீங்கள் சாராவுடன் டேட்டிங் செய்து வருகிறீர்களா என கேட்கப்பட்டது.இந்த கேள்விக்கு சற்று யோசித்த சுப்மன் கில், அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என ரசிகர்களை குழப்பும் வகையில் பதிலளித்துள்ளார் கில்