தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் சத்யராஜ்.இவரின் மகனான சிபி சத்யராஜ் பிரபல நடிகராக வலம் வருகின்றார்.இந்நிலையில் அவருடைய டிவிட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது டிவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் பயனாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத எலான் மஸ்க் ப்ளூ டிக் பெற 8 டாலர் நிச்சயம் வசூலிக்கப்படும் என பதிவிட்டிருந்தார்.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022
இதனை பார்த்த நடிகர் சிபி சத்யராஜ், தங்களின் GPay எண்ணை கொடுங்கள் என கேட்டு பதிவிட்டுள்ளார். சிபி சத்யராஜின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.