பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலி கியாரா அத்வானியை மணந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர்களது திருமணம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. இந்நிலையில், தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதுமண தம்பதி, தங்களின் புதிய பயணத்தில் ரசிகர்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் வேண்டுவதாக பதிவிட்டுள்ளனர்.
