நடிகர் சிம்பு தற்போது மீண்டும் வெற்றிகாமாக வலம் வர துவங்கியுள்ளார். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார் சிம்பு.
இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது சிம்பு அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தான் அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து பேசியிருக்கிறார். “நான் தற்போது காட்டு பசியில் இருக்கிறேன், அந்த பசியை தணிக்கும் விதமான கதைகள் எனக்கு கிடைக்கவில்லை.

இது போன்ற ஒரு மனநிலை முன்பு இருந்தபோது மன்மதன் படம் செய்தேன், ஒருவேளை நானே தற்போது படத்தை இயக்க வேண்டி இருக்கும், அல்லது அது போன்ற ஒரு கதையை நான் தேட வேண்டும்” என பேசியிருக்கிறார். மேலும் சிம்பு தனது ஐம்பதாவது படத்திற்க்கு பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.