Skygain News

வெந்து தணிந்தது காடு படத்தில் முத்தக்காட்சி..நோ சொன்ன சிம்பு..!

சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் கௌதம் மேனனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார். சிம்புவிற்கு ஜோடியாக இப்படத்தில் சித்தி இதானி முதன்முதலாக நடித்திருந்தார்.

இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணி என்றவுடன் காதல் படமாக தான் இருக்கும் என கணித்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புது வித அனுபவத்தை கொடுத்தது.

ஒரு அப்பாவி இளைஞனான முத்து மும்பை டானாக மாறுவதுதான் இப்படத்தின் கதைக்களம். தன் உடலை வருத்தி எடையை குறைத்து 20 வயது இளைஞனான சிம்பு நடித்திருந்தது பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் இப்படத்தில் சிம்புவின் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் லிப் லாக் இடம்பெறுவது போல அமைத்திருந்தாராம் கௌதம் மேனன். ஆனால் சிம்பு முத்த கட்சி வேண்டாம் என கூறிவிட்டாராம். அதன் பிறகு அக்காட்சியை சீட் செய்து எடுத்தாராம் கௌதம் மேனன்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.