சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றார்.மாநாடு ,வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து இரு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இதையடுத்து பத்து தல படத்தில் நடித்து வருகின்றார் சிம்பு.இந்நிலையில் சிம்பு அடுத்ததாக விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ம் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் ரிலீசாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் அப்படத்தில் நடித்த சிம்பு – திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி தான்.அப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்திருந்த சிம்புவும், திரிஷாவும் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் ரொமான்ஸ் செய்ய தயாராகி வருகின்றனர்.

இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது