Skygain News

வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு செய்த காரியம்..குவியும் பாராட்டுக்கள்..!

மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இதுவரை படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

அதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். இந்நிலையில் இப்படத்தில் 20 வயது இளைஞனாக நடித்த சிம்பு அதற்காக தன் உடல் எடையை 23 கிலோ வரை குறைத்துள்ளாராம்.

இத்தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார். மாநாடு படத்திற்காக தன் உடல் எடையை குறைத்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்காக மேலும் 23 கிலோ குறைத்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், இவ்வாறு உடல் எடையை குறைப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல எனவும் சில ரசிகர்களின் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More