சிம்பு மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு பட வெற்றிகளுக்கு பிறகு புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். இவ்வாறு அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சிம்பு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. KGF படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க சுதா கொங்காரா இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.