சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்தி இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
It’s a schedule wrap for #PathuThala#Atman pic.twitter.com/sWSdSkZvYF
— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2022
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது