சிம்பு நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களான மாநாடு ,வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இதையடுத்து பத்து தல படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இப்படத்தில் அவருடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சூர்யாவின் சில்லுனு ஒரு காதல், ஆரி நடித்த நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி உள்ளார். முஃப்டி என்கிற கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
#PathuThala wrap celebrations ✨❤️#SilambarasanTR @SilambarasanTR_ #Silambarasan @arrahman @nameis_krishna @StudioGreen2 @kegvraja #SilambarasanTR pic.twitter.com/HS869Qz9mA
— SIIMA (@siima) November 23, 2022
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு. அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது