தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் அறிவித்தப்படி தெலுங்கில் ரிலீஸ் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடி உள்ளதாகவும் இந்த பாடலை படத்தில் இணைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
EXCLUSIVE: #Varisu next single will be a high-octane mass song for Thalapathy which was shot recently at Bellari. Jani master choreography.
— Cinewoods (@TCinewoods) November 25, 2022
The song is sung by STR. Official announcement soon!@actorvijay @SilambarasanTR_ #VarisuPongal #Varisu pic.twitter.com/diasrx8odC
வாரிசு படத்திற்காக சிம்பு பாடிய பாடலுக்கான ரெக்கார்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது என்றும் இந்த பாடல் குறித்த தகவல்களை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது