Skygain News

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவில் அது நடக்குமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை அடுத்து அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் முன்றாவது முறையாக இணைந்துள்ளது.

கடந்தாண்டு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்கள் வரவேற்பை பெற சிம்பு இப்படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து 21 வயது மிக்கவராக நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.

வேல்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றார்.இந்நிலையில் இந்த விழாவில் கௌதம் மேனன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது

.சில மாதங்களாக வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More