Skygain News

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் இதுவரை செய்த வசூல்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.

கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணி என்றவுடன் காதல் படமாக தான் இருக்கும் என கணித்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புது வித அனுபவத்தை கொடுத்தது.ஒரு அப்பாவி இளைஞனான முத்து மும்பை டானாக மாறுவதுதான் இப்படத்தின் கதைக்களம்.

தன் உடலை வருத்தி எடையை குறைத்து 20 வயது இளைஞனான சிம்பு நடித்திருந்தது பலரது பாராட்டையும் பெற்றது.என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் 7 நாள் முடிவில் ரூ. 52 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More