Skygain News

சென்சார் செய்யப்பட்ட வெந்து தணிந்தது காடு..அதை பார்த்தா தான் பயமா இருக்கு..!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே இவர்கள் இணையும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மீண்டும் வெற்றிபெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்துக்கான புரமோஷன் பணிகளையும் மிகப்பெரிய அளவில் செய்து வருகின்றனர்.

இப்படத்துக்கான முன்பதிவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் 2 மணிநேரம் 53 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

எனவே ரசிகர்கள் சிலர் ரன்னிங் டைம் நீளமாக உள்ளது தான் சற்று பயமாக இருக்கின்றது என கருத்துக்களை கூறிவருகின்றனர். என்னதான் படம் நன்றாக இருந்தாலும் ரன்னிங் டைம் அதிகமாக இருந்தால் சலிப்புத்தட்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More