சிம்பு நடிப்பில் கௌதம் மேனனின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இன்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகியுள்ளது.. திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் ஆரவாரம் செய்து இப்படத்தை அமோகமாக வரவேற்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்துள்ளதால் இந்தப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ள ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்களை தெறித்து வருகின்றனர். சாதாரண மனிதன் எப்படி டானாக மாறுகிறான் என்பதே ‘வெந்து தணிந்தது காடு’ படம்.
கெளதம் சொன்னதை போலவே மெதுவாக ஆரம்பிக்கும் படம் போக போக வேகமெடுப்பதாகவும், இண்டர்வேல் காட்சியில் தியேட்டர் அதிருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிம்பு படத்திற்காக மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பின்னி எடுத்துள்ளதாகவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
#VendhuThanindhathuKaadu – #SilambarasanTR delivers one of his career best performances in #VTK as Muthu. He breathes life to the character and puts out a performance that keeps you engrossed. @SilambarasanTR_ #VTKReview pic.twitter.com/bWzh1coGyg
— Galatta Media (@galattadotcom) September 15, 2022
மேலும் படம் வேற லெவலில் இருப்பதகாவும், சிம்பு நடிப்பிற்கு கண்டிப்பாக அவார்ட் கிடைக்கும் என ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்களின் மத்தியிலும் இப்படத்திற்கு அமோகமான விமர்சனங்களே கிடைத்துள்ளதால் இப்படம் மிகப்பெரிய வற்றியை பெற்று வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
#VTK [3.5/5] : @SilambarasanTR_ and @menongautham deliver the goods.. 👍👍
— Ramesh Bala (@rameshlaus) September 15, 2022
#VTK superb performance from STR
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 15, 2022
No english dialogues, No voice over.. New GVM