நியூஸிலாந்து மற்றும் இந்திய மோதிய முதல் T20 போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது தான் பரபரப்பை ஏற்படுத்தியது. கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அவரால் ஒரு ஓவரை கூட வீசமுடியவில்லை. இதனால் அவரின் ஓவரை தீபக் ஹூடா வீசி, அதில் வெற்றியும் கண்டார். 2.5 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் இதுபற்றி பேசிய நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் இந்திய அணியில் எப்போதுமே பிரச்சினையாக இருப்பது பவுலிங் மட்டும் தான். ஹர்திக் பாண்ட்யா போன்ற ஒருவர் காயமடைந்துவிட்டால், அடுத்து என்ன செய்வார்கள் என்று பார்த்தால் பதிலே கிடையாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாக்கூர் அவரின் இடத்தை உடனடியாக பூர்த்தி செய்தார்.
ஆனால் டி20ல் என்ன செய்வார்கள்.ஒரு முழு நேர பேட்ஸ்மேன் அவசரத்திற்கு பந்துவீச தயாராக இருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் அங்கு எதற்காக இருக்கிறார்? அவர் ஏன் ஆஃப் ஸ்பின் வீச தயாராக இல்லை. ஒருவேளை இந்திய அணியில் ஸ்பின்னர்கள் தட்டுப்பாடு இருந்தால், முதலில் சென்று ஆஃப் ஸ்பின் வீசுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் அதை செய்வதில்லை. அவரால் அது முடியும். எதிர்கால கிரிக்கெட்டிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதை இந்த வீரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.