ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் மெண்டல் மனதில் பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் ஜோனிடா. அதன் பின் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லமா பாடலை பாடினார்.
இப்பாடலை பாடிய பிறகு இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாக துவங்கியது. அதன் பின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலையும் பாடினார். இந்நிலையில் இவர் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.’
தானா சேந்த கூட்டம்’ படத்தில், விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் 5 முக்கிய நடிகைகள் குறித்த தகவலை தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன் படி, பிரபல பாடகி ஜோனிதா காந்தி இந்த படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்குகிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ரியா சுமன், வைஷ்னவி, ரேச்சல் உள்ளிட்ட நான்கு நடிகைகள் நடிக்க உள்ளனர்.இதன் மூலம் ஜோனிடா காந்தி மேலும் ரசிகர்களிடம் பிரபலமானார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது
.@jonitamusic to debut as actor in #WalkingTalkingTalkingStrawberryIceCream
— MOVIE HERALD (@MovieHerald_) September 1, 2022
Directed by @vinayakv306
@KK_actoroffl #WikkiFlix pic.twitter.com/OXZB2qJ806