Skygain News

சரித்திரம் போற்றும் சிங்கார சென்னைக்கு வயது 383..!

நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள் சில நேரங்களில் ஒரு தேசத்தின் வரலாற்றையே தலைகீழாக மாற்றி எழுதிவிடுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை பெயர் காரணம்

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகியோரிடமிருந்து சிறு நிலப்பகுதியை வாங்கி அதில் மெட்ராஸ் நகரத்தை உருவாக்கி செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது கிழக்கிந்தியக் கம்பெனி.

புதிய நகரத்துக்கு நிலத்தை வழங்கிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே இருந்த ஊர் சென்னப்பட்டனம் என்று அழைக்கப்பட்டது. கடந்த 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தபோது, மெட்ராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமாக்கப்பட்டு சென்னை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையின் சிறப்புகள்

வந்தாரை வாழவைக்கும் நகரம் என்று போற்றப்படும் நமது சிங்காரச் சென்னைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.

உலகில் இரண்டாவது பெரிய நகர்ப்புற கடற்கரையைக் (Urban Beach) கொண்ட நகரம் சென்னை.

மெரினா கடற்கறையின் நீளம் 13 கி.மீ. ஆகும்.இந்தியாவின் முதல் கார்ப்பரேஷன் சென்னை கார்ப்பரேஷன்தான்.

உலகின் இரண்டாவது பழைமையானதும் சென்னை கார்ப்பரேஷன்தான். அது உருவாகக் காரணமான ரிப்பன் பெயரால் அமைக்கப்பட்டதுதான் ரிப்பன் கட்டடம்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தைக் கொண்டது (அண்ணா நூற்றாண்டு நூலகம்) சென்னை.

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது சென்னை மாநகராட்சியில்தான்!

இந்தியாவின் மிகப்பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரிதான்.

இந்தியாவின் முதல் வானொலி சென்னையில்தான் தொடங்கப்பட்டது.

இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா (கிண்டி சிறுவர் தேசியப் பூங்கா) இருக்கும் ஒரே நகரம் சென்னைதான்.

இந்தியாவின் முதல் வங்கி சென்னையில்தான் தொடங்கப்பட்டது. ஆளுநர் க்ரிபோர்ட் அவர்களால் 1682இல் மெட்ராஸ் வங்கி தொடங்கப்பட்டது.

ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை (Madras Eye Infirmary) சென்னையில்தான் தொடங்கப்பட்டது. (1819)

கோலிவுட் (Kollywood) எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் சென்னைதான்.
இவற்றுடன், வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் (புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர்.) ரயில் நிலையம், அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகள், எலியட்ஸ் பீச், அரசு அருங்காட்சியகம் (எழும்பூர்), பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட ஏராளமான சிறப்புகளைக் கொண்டது சென்னை.

இந்நிலையில் தற்போது 383 வயதைக் கடந்தபோதும் ஆண்டுக்கு ஆண்டு சென்னையின் இளமை கூடிக்கொண்டே போவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்த்துகள் சென்னை…

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More