சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டான்’ படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.’
டான்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுதீப் இயக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தீபாவளிக்கு இந்தப்படம் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு அனைவரும் பார்க்கும்படியான படம் என U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.