Skygain News

சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி..ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். மேலும் கடைசியாக வெளியான இவரது படங்களான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் இவரின் அடுத்தடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘பிரின்ஸ்’.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகி வருகிறது.

இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.மேலும் படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More