Skygain News

அடுத்த அதிரடிக்கு தயாரான சிவகார்த்திகேயன்..கொண்டாடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். அந்த சயமத்தில் தான் டாக்டர், டான் என இரு மெகாஹிட் படங்கள் சிவகார்த்திகேயனை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.தெலுங்கில் கடந்த ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜாதி ரதனலு படத்தை இயக்கிய அனுதீப் தான் பிரின்ஸ் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம், அவர் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடித்துள்ளார்.இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 21-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த இளைஞரான சிவகார்த்திகேயன், வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதன் பின்னணியும், அதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லியுள்ளனர்.

காமெடி காட்சிகள் நிறைந்து கலர்புல்லான பிரின்ஸ் படத்தின் டிரைலர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய இருக்கின்றார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More