விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாகவே சிவகார்த்திகேயன் உள்ளார். பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவான நிலையிலும், சாதிக்க முடியாத இடத்தை சினிமா பேக்கிரவுண்டே இல்லாமல் உள்ளே நுழைந்து தனது பெரும் முயற்சியால் சாதித்து, ஏகப்பட்ட புதுமுக நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே மாறிவிட்டார். சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் தனது கடும் உழைப்பால் வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்தாலும் துவண்டு விடாமல் போராடி வரும் சிவகார்த்திகேயனுக்கு ஒட்டுமொத்தமாக 110 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
