சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு இப்படத்தில் இணைந்துள்ளார்.
பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.