சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர். சின்னத்திரையில் ஆரம்பமான இவரது பயணம் இன்று வெற்றிகரமாக வெள்ளித்திரையில் அரங்கேறி வருகின்றது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்தது.
இதன் காரணமாக இடையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், மண்டேலா பட இயக்குனரான அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.
மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பீன்ஸ் படத்திலும் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். அனுதீப் இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் இப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அப்படத்தின் ரீலிஸில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம், தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 21 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என இயக்குநர் அனுதீப் தகவல் அளித்துள்ளார். எனவே தீபாவளிக்கு முன்னதாகவே சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் துவங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.