‘டான்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுதீப் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ என்ற ஹிட் படத்தை கொடுத்த அனுதீப் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. மேலும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் வேறலேவலில் ஒர்க்கவுட் ஆகியதால் ‘பிரின்ஸ்’ படமும் காமெடியில் கலக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தினர்.
இந்நிலையில் இன்று இப்படம் திரையில் வெளியாகியுள்ளது.ரசிகர்களின் அமோக வரவேற்பை பிரின்ஸ் திரைப்படம் பெற்று வருகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.படத்தை பற்றி பார்க்கையில் ,வழக்கம் போல் நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார் சிவகார்த்திகேயன். நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் என பக்காவாக நடித்துள்ளார். குறிப்பாக நடனத்தில் பின்னியெடுக்கிறார்.
நடிகை மரியா தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் உள்ளதை திருடிவிட்டார். அழகாக வந்து அளவான நடிப்பை காட்டியுள்ளார்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். தனக்கு கிடைத்து ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமாக ஸ்கோர் செய்து அசத்திவிட்டார்.

முதல்முறையாக வித்தியாசமாக திரையில் தெரிந்த பிரேம்ஜியின் நடிப்பு ரசிக்கக்கூடியதாக இருந்தது. அவருடைய இந்த முயற்சிக்கு தனி பாராட்டு.எனவே ஒட்டுமொத்தமாக பிரின்ஸ் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது