Skygain News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தமாதம் ( ஆகஸ்ட் ) நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளும் விழா நடைபெறும்.

தொடர்ந்து 2-ம் தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவையும், 6-ம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவமும் நடைபெற உள்ளது. அத்துடன் 9-ம் தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம், 11-ம் தேதி சிரவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தியும், உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல் விழாவும் . 19-ம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தான விழாவும், 20-ந்தேதி உறியடி உற்சவமும், 29-ம் தேதி பலராமர் ஜெயந்தியும் , வருகிற 30 ஆம் தேதி வராஹ ஜெயந்தி மற்றும் 31ம் தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி) விழாவும் நடைபெற உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More