இந்திய அணி ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்ததிலிருந்தே பல விமர்சனங்களும் அறிவுரைகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரை இந்தியா வென்றதும் அந்த விமர்சனங்கள் எல்லாம் சற்று ஓய்ந்திருந்தன. இருப்பினும் ஒரு சில வீரர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றது.
அதில் மிக முக்கியமானவர் புவனேஸ்வர் குமார். ஆசிய கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்குகிறார். ஆஸ்திரேலியாவுடனான கடைசி டி20ல் கூட 18வது ஓவரில் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதனால் அவரின் ஃபார்ம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் புவனேஷ்வர் குமாருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு பவுலர் சிறப்பாக பந்துவீசும் போதிலும் 60 – 70% தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். ஏனென்றால் சிறப்பான பேட்டிங்கும் செய்வார்கள். எனவே புவனேஷ்வர் குமாருக்கு நாம் துணையாக நிற்கவேண்டும். தினேஷ் கார்த்திக்காக அனைவரும் ஆதரவு தருகிறோம். அதே போல தான் புவனேஷ்வர் குமாரும்.

புவனேஷ்வர் குமார் அட்டகாசமாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர். ஆஸ்திரேலியா போன்று நல்ல பவுன்ஸ் இருக்கக்கூடிய பிட்ச்-களில் அவர் தனது வேகத்தில் மட்டும் வித்தியாசங்களை காட்டினால் போதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் நான் சொல்வதை கேட்பார் என்றால், ஒன்றே ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன். பலர் விமர்சிக்க தான் செய்வார்கள். அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் விளையாட வேண்டும் என்றார் ஸ்ரீசாந்த்.