நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்று இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓபனிங் வீரர்கள் குஷல் மெண்டிஸ் 0 (1), நிஷங்கா 8 (11) ஆகியோர் வெகுசீக்கிரம் வெளியாகி ஏமாற்றினர்.
இதன்பின்னர் வந்த வீரர்களும் சொதப்ப, இலங்கை அணி 58/5 எனத் திணறியது. எனினும் மிடில் ஆர்டரில் அடுத்து ராஜபக்சா 71 (45) – ஹசரங்கா 36 (21) அதிரடி பார்ட்னர்ஷிப் அமைக்க, இலங்கை அணி 20 ஓவர்களில் 170/6 ரன்களை எடுத்தது.கடின இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இந்த முறையும் கேப்டன் பாபர் அசாம் (5) சொதப்பினார்.
அந்த அணியில் முகமது ரிஸ்வான் 55 (49), இப்திகார் அகமது 32 (31) இருவர் மட்டுமே சிறப்பாக விளையாட மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.துபாயில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணி தான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் நேற்று இலங்கை அணி வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது,. இந்நிலையில் இதற்கு சிஎஸ்கே தான் காரணம் என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், அமீரகத்தில் டாஸை இழந்தவுடன் போட்டியை இழந்தது போன்ற மனநிலை வந்துவிடும்.
ஆனால் எங்களுக்கு அப்படி தோனவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் தான் செய்தனர். ஆனால் அவர் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். அவர்களின் வெற்றி, எங்களுக்கும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தது. இந்நிலையில் இதைப்பார்த்த தோனி மற்றும் சென்னை ரசிகர்கள் இத்தகவலை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.