சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கிரிக்கெட் கோப்பையை இலங்கை அணி வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடர் ஆரம்பிக்கும் போது இலங்கை அணி கோப்பையை வெல்லும் என்று இலங்கை அணி ரசிகர்களே நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு அணி பலவீனமாக இருந்தது.
ஆனால் இலங்கை அணியின் வீரர்கள் தங்களின் திறனை நம்பி போராடி கோப்பையை வென்றுள்ளனர். இத்தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் படுதோல்வி அடைந்தது இலங்கை அணி.
Sri Lanka were voted 0% of winning the Asia Cup on 3rd September – a week later they're the champions. pic.twitter.com/P4Wr1D8prl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 11, 2022
அதன் பிறகு எழுச்சி பெற்ற இலங்கை அணி வங்கதேசத்தை வென்றது. பின்பு இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இவர்களின் சமீபத்திய எழுச்சிக்கு இவர்களின் அணுகுமுறையே காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பயமே இல்லாமல் அடித்து ஆட வேண்டும். விக்கெட்டுகள் விழுந்தாலும் சரி, பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அடித்து ஆட வேண்டும் என்று இலங்கை வீரர்கள் மனதில் தைரியத்துடன் ஒவ்வொரு போட்டியையும் அணுகினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
தொடர்ந்து பந்துவீச்சும் எதிர்பார்த்தப் படி கிளிக் ஆக, சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்று கம் பேக் கொடுத்திருக்கிறது. மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் சில இலங்கை வீரர்கள் ஆடியதும் அவர்களுக்கு கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The 𝑪𝑯𝑨𝑴𝑷𝑰𝑶𝑵𝑺 of the #AsiaCup2022 🏆
— ICC (@ICC) September 11, 2022
Congratulations, Sri Lanka 👏 pic.twitter.com/c73cmcaqNz