தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா நேற்று வெகு விமர்சையாக தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சிறப்புரை ஆற்றினார்.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசுகையில்
தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியில் கமிஷன்,கலெக்ஷன், கரப்ஷன், இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதா மாதம் வீடுகளுக்குச் சென்று மின்சாரக் கட்டணத்தை கணக்கீடு செய்வோம் என கூறியதை நிறைவேற்றாத அரசுதான் திமுக அரசு என்று தெரிவித்தார் .