தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் அட்லீ.இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன. அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். ஒரு கதாபாத்திரத்துடன் படம் முழுக்க வரும் வேடத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
மற்றொரு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடையது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணிக்கம் நாராயணன் என்பவர் அட்லீ மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீதான விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்