உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தன்னிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இரண்டாவது வாய்ப்பாடு ஒப்பிக்கும்படி சொல்லி இருக்கிறார். அப்போது ஒரு மாணவருக்கு வாய்ப்பாடு சரியாக சொல்லத் தெரியாமல் போயிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கணக்கு ஆசிரியர், பள்ளியில் இருந்து டிரில்லிங் மிஷினை எடுத்து வந்து மாணவரின் கையை நீட்டும்படி சொல்லி அதில் துளை போட்டு இருக்கிறார். இதில் அந்த மாணவர் வலி தங்க முடியாமல் கதறி துடித்திருக்கிறார். இதை பார்த்து பதற்றம் அடைந்த சக மாணவர்களின் ஒருவர் டிரில்லிங் மிசின் வயரை உடனடியாக பிடுங்கி இருக்கிறார்.

இதனால் காயத்துடன் அந்த மாணவர் அலறி அடித்து தப்பி இருக்கிறார். இது குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து தங்கள் மகனை மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் அந்த மாணவர் வீடு திருப்பிய நிலையில் அவரின் பெற்றோர் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.