தமிழ் சினிமாவில் ட்ரெண்டிற்கு ஏற்ப காமெடி படங்களை எடுத்து அசத்தி வருபவர் தான் சுந்தர் சி. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தை குஷ்பு தயாரித்துள்ளார். இந்நிலையில் இன்று இப்படம் திரையில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி 4 பேரும் சகோதர, சகோதரிகள். இதில் ஜெய்யை ஒரு தலையாக அமிர்தா காதலிக்கிறார். ஜெய்க்கோ பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடத்தை பார்க்கிறார், அந்த இடத்தின் உரிமையாளர் மகளை ஹோட்டல் கனவிற்காக ஓகே சொல்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் உள்ளார்.
அவர் அமெரிக்காவிலிருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா பிக்கப் செய்ய போக, இவர்களுக்குள் காதல் பற்றிவிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து ஜீவா பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார், அவர் தான் ரைஸா வில்சன்.ஆனால், ரைஸாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த்.
இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள், யார் யாரை பிரிந்தார்கள் என்பதே மீதிக்கதை..படத்தின் கதை சற்று குழப்பமானதாக இருந்தாலும் அதை முடிந்த அளவிற்கு ரசிகர்களுக்கு புரியும் படி நகைச்சுவையாக சொல்ல முயற்சி செய்திருக்கின்றார் சுந்தர் சி. ஆனால் அந்த முயற்சியில் அவர் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்லவேண்டும்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாகவும் இல்லாமல், பீல் குட் படமாகவும் இல்லாமல் திரைக்கதை சற்று தடுமாறியுள்ளது. படத்தின் இசை, விசுவல் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் படத்தில் ஏதோ ஒரு குறை இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்